இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, லூக்கா-13:12
இன்று மனிதரைப் பலவீனப்படுத்தும் பலவிதமான ஆவிகள் கிரியை செய்கிறதை நாம் காணலாம். தொழில் நஷ்டங்கள், பிறருடைய வார்த்தைகள் சமுதாயத்தில் நமக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது
சில பெற்றோர் சொல்லொன்னா வேதனைகள் மத்தியில் வாழ்கிறார்கள். இவை யாவும் எந்த ரூபத்தில் நம்மைத் தாக்கினாலும், அதற்குப் பின் சாத்தானுடைய கிரியை இருப்பதை அநேகர் அறியாதிருக்கிறார்கள்.
பிரியமானவர்களே, இவை யாவும் சாத்தானுடைய கிரியையே! பாருங்கள், ஓர் அம்மா பதினெட்டு வருடமாகச் சாத்தானால் கட்டப்பட்டிருந்தாள். அவள் எவ்வளவேனும் நிமிரக்கூடாத கூனியாய் இருந்தாள் என்று காண்கிறோம். ஆனால் இயேசு தேவாலயத்தில் அந்தத் தாயை சந்தித்தார். அவளுடைய நிலையை உணர்ந்த இயேசு, அவள் மேல் மனதுருகி அவளைச் சுகப்படுத்தி, நீ உன் பலவீனத்திலிருந்து விடுதலைப்பெற்றாய் என்று கூறினார்.
ஆம் இதை வாசிக்கும் அருமை நண்பனே, உங்களை உங்கள் பலவீனத்தினின்றும் விடுதலை செய்ய, இயேசு உங்கள் அருகில் இருக்கிறார். தயங்காமல் ஆண்டவரே எனக்கும் இரங்கும் என்று கூறுங்கள். இன்றே விடுதலை! அந்தத் தாயை நிமிரச்செய்த இயேசு, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தலைநிமிர்ந்து நிற்கச் செய்வார்.ஆமென்.
இயேசுவே, கவலையில் இருக்கும் மனிதர்களுக்கு, தனிப்பட்ட முறையில் உமது அக்கறையை வெளிப்படுத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது முன்மாதிரியைப் பின்பற்றி, என்னுடைய செயல்களில் மனதுருக்கத்தை வெளிப்படுத்த உதவும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments