Being Salt and Light in Zurich

அவர் நம்மை தெரிந்து கொண்டார்

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.  யோவான்-15:16

அஜித் என்பவன் ஒரு வாலிபன். மிகவும் திறமைசாலி. தொழிலில் முன்னேற வேண்டும் என்று பல உபாதைகளைக் கொண்டு செயல்பட்டவன். ஆனால் திடீர் என மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான். அவனுடைய நண்பன் அவனைப் பார்த்து, “தேவனைத் தேடு! அப்பொழுது விடுதலையும், வெற்றியும் தேடி வரும்” என்றான். அஜித்தோ அதை அசட்டை செய்தான். திடீர் என நோயுற்றவனாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அப்பொழுது வேறு ஒரு நண்பன் அவனைச் சந்தித்து, “இயேசுவை தேடு! அப்பொழுது சுகமும், விடுதலையும், வெற்றியும் தேடி வரும்” என்றான்.

அஜித்தோ அதை ஏற்க மனமற்றவனாகக் காணப்பட்டான். அன்று இரவு தனிமையில் அவன் காதுகளில் விழுந்த செய்தி அவனைத் திடுக்கிட வைத்தது. செய்வதறியாது திகைத்த அவன் தன் நண்பர்கள் கூறியவற்றை நினைத்துப் பார்க்கலானான். இயேசுவே நீர் தெய்வமானால், என்னைக் குணப்படுத்தும் என்று நினைத்துக்கொண்டு கண்களைத் திறந்த போது, அந்த அறை முழுவதும் பெரிய பிரகாசம் காணப்பட்டது. சுகம் பெற்றான். அவனுக்குள் தன்னம்பிக்கை பிறந்தது. அவன் மருத்துவமனையைவிட்டு வருமுன், தான் பெற்ற சுகத்தையும் மாற்றத்தையும் அநேகருக்குத் தெரியப்படுத்தினான். மதுவுக்கு அடிமையான அநேகர் விடுதலை பெற்றனர்.

இதை வாசிக்கும் அருமை நண்பனே! எவ்வித சூழ்நிலையில் இருந்தாலும், இயேசுவே என்றழையுங்கள். கூப்பிடும் சத்தத்திற்குச் செவி கொடுக்கும் இயேசு உங்களுக்கு அற்புதம் செய்வார். காரணம் உலகத் தோற்றத்திற்கு முன்னமே அவர் உங்களைத் தெரிந்து கொண்டார். எனவே வியாதியில் சுகம். தீய பழக்கங்களிலிருந்து விடுதலை. தேவைகள் சந்திக்கப்படும். வெற்றியுள்ள ஒரு வாழ்வும், ஆசீர்வாதமும் உங்கள் வாழ்வின் நிறைவாகும். ஆமென்.


ஆவியானவரின் கனி நம்மை மாற்றுவதால், நம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்வில் நாம் முத்திரை பதிக்க முடியும்.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/

Live

0 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *