கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். மத்தேயு-6:22
நம்முடைய வாழ்வின் ஆசீர்வாதம் மூன்று அவயங்களில் அடங்கி உள்ளது. அதாவது வாய், மூக்கு மற்றும் கண் என்று மகாத்மா காந்தி இம்மூன்றையும், மூன்று குரங்குகள் ஒன்றாக அமர்ந்த சித்திரத்தின் மூலமாக விளக்கி இருக்கிறார். அதாவது தீயவற்றைப் பார்க்காதே; தீயவற்றைப் பேசாதே; தீயவற்றை கேளாதே.
இம்மூன்றையும் குறித்து ஏசாயா-33:15-16 இல் இவ்வாறு வாசிக்கிறோம்
நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
பார்த்தீர்களா! எத்தனை பெரிய ஆசீர்வாதம்? இந்த மூன்று அவயவங்களையும் ஒரு மனிதன் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்கும் போது, சாபமானது அவனையும் அவனைச் சுற்றியுள்ளோரையும் வேதனைப்படுத்துகிறது. இன்று முதலில் நம் கண்கள் தெளிவுள்ளவைகளோ என்று பரிசோதனை செய்ய வேண்டும்.
சேவல் ஓன்று ஓர் இனிய காலை பொழுதினிலே, சூரியனின் பொற்கதிர்கள் வீச ஒரு குன்றின் மேல் நின்றது. அதை ஒரு கவிஞன் கண்டான். எத்தனை அருமை என்று ஒரு கவிதை எழுதினான். இன்னும் ஒரு மனிதன் அதைப்பார்த்தான். எத்தனை அருமை என்று அதை தத்ரூபமாக வரைய ஆரம்பித்தான். அவ்வழியே வந்த ஒரு குடிமகன், அடடா இதைப் பிடித்துச் சமைத்து ஒரு குவாட்டர் அடித்தால் எப்படி இருக்கும் என்று கூறினான்.
ஆம் பிரியமானவர்களே, இன்று நாம் நம்மை பார்ப்பதும், அதே வேளை மற்றவர்களைப் பார்க்கும் பார்வையே நம்வாழ்வின் ஆசீர்வாதத்திற்கு வழிவகுக்கும். எனவே கண் தெளிவாயிருக்கட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
தன்னிடம் கேட்பவர்களுக்குத் தெளிவான பார்வையைத் தருவதே பரமபிதாவின் மகிழ்ச்சியாகும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments