கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். ஏசாயா-52:12
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மேல் கண்களை வைத்து, மிகவும் கரிசனையோடு பாதுகாத்து வளர்ப்பதை நாம் காணலாம். காரணம் அவர்கள் தங்கள் பிள்ளையின் மேல் கொண்ட அன்பே! அந்தத் தாயும், தந்தையும் மறந்தாலும் நான் மறவேன் என்றவரும், தமது ஜீவனை நமக்குத் தந்தவருமான நமது இரட்சகர் நம் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் தெரியுமா?
வேதத்திலே நாம் வாசிக்கிறோம்; உன் மேல் என் கண்ணை வைப்பேன். உன்னைத் தொடுகிறவன் என் கண்ணிமணியைத் தொடுகிறான் என்று சொன்னவர், உன்னைக் காப்பவர் உறங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறாரே! அப்படியானால் உங்களுக்கு விரோதமாக வருபவன் யார்?
பிரிய மானவர்களே பாலாக் ஒருமுறை தேவ ஜனத்துக்கு விரோதமாகச் செயல்படத் துணிந்த போது தேவன் தடுத்தாரே! ஒரு முறை மோசேக்கு விரோதமாக அவன் சகோதரன் ஆரோனும், சகோதரி மீரியாமும் பேசினார்கள். அது மோசேக்கே தெரியாது! ஆனால் உறங்காமல் பாதுகாக்கும் தேவன் மோசேக்காக யுத்தம் செய்ததை நாம் வாசிக்கிறோம்.
அதே தேவன் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் காப்பார். எதிரிடையாக வருவோரை எதிர்த்துப் போரிடுவார். கலங்க வேண்டாம்! பயப்படவேண்டாம்! நீங்கள் நின்று உங்களைக் காப்பவர் செய்யும் அற்புதத்தைப் பார்த்து தேவனைத் துதியுங்கள். ஆமென்.
தேவனுடைய கண்கள் எப்பொழுதும் அவருடைய பிள்ளைகளின் மீது இருக்கின்றன.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments