அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. சங்கீதம்-37:31
வேதம் என்று கூறும் போது மதத்தைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. மாறாக, தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள் அடங்கிய ஒரு கோர்வையையே (புத்தகம்) குறிப்பிடுகிறது. இன்று நாம் வாழும் இந்த உலகமானது, விபச்சாரம், வேசித்தனம், போதை என்று அநேக தீய பழக்க வழக்கங்களையே கொண்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஒரு மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி? அதற்கு வழிகாட்டிதான் என்ன?
நான் படித்த ஒரு கவிதை என் நினைவிற்கு வருகிறது. துன்பம் என்னும் கடலிலே, துடுப்பில்லா படகுக்குத் துன்பங்கள் அதிகம். வாழ்க்கை என்னும் படகிலே, தடுப்பில்லா மனிதனுக்குத் துன்பங்கள் அதிகம். அப்படியானால், வாழ்க்கையில் இது சரி, இது பிழை என்று விளக்கிக் கூறக் கூடிய ஒரு புத்தகம் தான் பரிசுத்த வேதாகமம்! இன்று ஒரு வாலிபனுடைய வழியைச் சரிசெய்வது பரிசுத்த வேதாகமம். எனவே தான் வேதத்தில் வாசிக்கிறோம் “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே”
அது எப்படி என்றால் சங்கீதக்காரன் அதற்கு விடை கொடுக்கிறான். உம்முடைய வேதம் என் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது. அதனால் இடறிவிழவோ நடைகள் பிசகிப்போகவோ வாய்ப்பில்லை. எனவே வாலிப நண்பனே! தினமும் வேதத்தை வாசியுங்கள். அப்பொழுது உங்கள் நடைகள் பிசகாமல் இருக்கும்.
சங்கீதம் ஒன்றைப் பல முறை வாசியுங்கள். அப்பொழுது அதின் இரகசியத்தை அறிந்து கொள்ள முடியும். அதாவது நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென். அல்லேலூயா
வேதத்தை கவனமாய் வாசித்து ஜெபத்துடன் தியானியுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments