உமது வேதம் என் மனமகிழ்ச்சியா யிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். சங்கீதம்-119:92
அநேக நேரங்களில் மனசஞ்சலங்களில் தனிமையுற்ற நேரங்கள். தோல்விகள் எதிர்த்து முன் செல்ல முடியாத தடைகள். இப்படித் துக்கங்கள் அதிகரிக்கும் போது, தற்கொலை ஒன்றே தீர்வு என்று அநேகர் முடிவெடுப்பதுண்டு. சங்கீதக்காரன் சொல்வதைக் கவனியுங்கள். எனக்குப் புறாவைப் போலச் சிறகு இருந்தால் பறந்து போய் இளைப்பாறுவேன். காரணம் அவ்வளவாய் நெருக்கப்பட்டான்.
யோபுவைப் பாருங்கள்!
நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.யோபு-3:3
தான் பிறந்த நாளை சபித்தான். காரணம் சொத்தை இழந்தான். சுகத்தை இழந்தான். பிள்ளைகளை இழந்தான். காரணம் என்ன? யோபு-6:2-3 ஐ வாசித்துப் பாருங்கள். என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும். அப்பொழுது அது கடற்கரை மணலைப் பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. ஆனாலும் அவனைத் திடப்படுத்திப் பெலப்படுத்தி மறுபடியுமாக அவனை ஆசீர்வதித்தது தேனுடைய வார்த்தை.
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.யோபு-29:3
அந்தத் தீபம் எது பாதைக்கு வெளிச்சம் கொடுக்கும் தேவனுடைய வார்த்தை! இப்படி நாமும் பலவிதமான சோதனைகளுக்குள் போகும் போது, வாழ்க்கையின் ஓரத்திற்கே வந்த போது, தேவனுடைய வார்த்தை ஏதோ ஒருவிதத்தில் நம்மைத் திடப்படுத்தியது பெலப்படுத்தியது. நாம் ஒழிந்து போகாதபடி பாதுகாத்தது. எனவே தேவ வார்த்தையை வாசியுங்கள். ஏற்ற வேளைகளில் அந்த வார்த்தை நம்மோடு இடைப்படும். அழிவிலிருந்து பாதுகாக்கும். ஆமென். அல்லேலூயா
தேவனுடைய வார்த்தையாகிய வெளிச்சத்தில் நடக்கும் போது நீ இருளில் தடுமாறமாட்டாய்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments