துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். சங்கீதம்-32:10
கிருபை இலவசமாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும். அந்தக் கிருபையானது, வேதனைகளுக்கு நம்மை விலக்கி காக்கும். இங்கே பார்க்கிறோம் கிருபை சூழ்ந்துகொள்ளும். இது எத்தனை பெரிய பாதுகாப்பை நமக்கு உறுதிப்படுத்துகிறது பாருங்கள்.
யோபுவை இந்தக் கிருபை சூழ்ந்துகொண்ட போது, பிசாசானவன் உள்ளே போக முடியாது தேவனிடத்திலேயே முறையிட்டான். நீர் அவனை வேலியடைக்கவில்லையா?. தேவ பிள்ளையே! இந்தக் கிருபை நம்மைச் சூழ்ந்துகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்? கர்த்தரை நம்பியிருக்கவேண்டும். அப்படிக் கர்த்தர் மேல் நாம் நம்பிக்கை வைப்போமானால் வெற்றியுண்டு. அப்படி நம்பிக்கை வைப்பவர்களிடம் சுயம் காணப்படாது. அதாவது சுயம் செத்து அடக்கம் பண்ணப்பட்டிருக்கும்
எனவே தான் பவுல் அடிகள் சொல்வதைக் கவனியுங்கள். நான் அல்ல கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார். காரணம் ஒரு காலத்தில் நான் எபிரேயன். நான் பெஞ்சமீன் கோத்திரத்தான். நான் கமாலியனுடைய பாதத்திலே இருந்து வேதத்தைக் கற்றுக் கொண்டவன் என்று நான் நான் என்று பெருமிதம் கொண்ட மனிதன். நான் ஒன்றுமில்லை அறிந்தவனாக நான் மரித்துத் தனக்குள் கிறிஸ்து ஜீவிக்கிறதை கண்டு கொண்டான்.
அப்படிப்பட்ட மனிதன் தான் கிறிஸ்துவில் முழு நம்பிக்கை வைக்கிற மனிதனாகக் காணப்படுவான். அவனைக் கிருபை சூழ்ந்துகொள்ளும். இன்று உங்கள் வாழ்விலும் இந்தக் கிருபை சூழ்ந்துகொள்ள வாஞ்சியுங்கள். அப்பொழுது, உங்கள் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் பிள்ளைகள் வாழ்விலும் பிசாசு உள் நுழையமுடியாது. ஆமென்.
தேவனே, உம்முடைய இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments