எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது கலாத்தியர்-2:9
பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எபேசியர்-3:8
பாருங்கள்! புதிய ஏற்பாட்டில் பன்னிரண்டு கடிதங்களைச் சபை சீர்திருத்தத்திற்காக எழுதியவரும், தேவனால் நேரடி அழைப்பை பெற்றவனும், வேதத்தை முறைமையாகக் கற்றுக் கொண்டவனுமாகிய பவுல் தன்னைத் தாழ்த்தும் விதத்தைக் குறித்துக் கவனியுங்கள் – பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான். இது தாழ்மையை எடுத்துக் காட்டுகிறது.
யோவான் ஸ்நானன் தன்னைத் தாழ்த்தும் விதத்தைப் பாருங்கள். அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். அதுமட்டுமல்ல, நான் அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்க கூடத் தகுதியற்றவன் என்று கூறும் அவனைக்குறித்து இயேசு சொல்வதைக் கவனியுங்கள். தாயின் வயிற்றில் பிறந்தவர்களில், யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனுமில்லை. மரியாளைப் பாருங்கள்! அவள் நான் தேவனுக்கு அடிமை என்று தன்னை அடையாளப்படுத்துகிறாள். அவள் தேவதூதனால் எப்படி வாழ்த்தப்பட்டாள்? கிருபை பெற்றவளே, வாழ்க! நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
எனவேதான் வேதம் இவ்விதமாக எடுத்துரைப்பதை காணலாம். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். எனவே கிருபையைப் பெற்றுக் கொள்ள நம்மை முற்றுமாகத் தாழ்த்துவோம். ஆமென்.
நம்முடைய வாழ்க்கையில், தேவனுடைய புதிய கிருபைகள் எந்த நேரத்திலும் அருளப்படலாம். அவருடைய கிருபை எப்பொழுதுமே உள்ளது.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments