அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான். எஸ்தர்-2:18
எஸ்தர் ஓர் அநாதை. அவளுடைய தாயும் தகப்பனும் மரித்துப் போனார்கள். தன் சகோதரனால் வளர்க்கப்பட்டாள். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! எஸ்தர் தன்னுடைய சிறு வயதில் எத்தனை தூரம் மனவேதனை அடைந்திருப்பாள்? மற்ற பிள்ளைகளைப் பார்க்கும் போது, எல்லோரும் பெற்றோரோடு விளையாடுவதும், சகோதரர்களின் அன்பில் பிள்ளைகள் மகிழ்வதையும் கண்டு உள்ளம் உடைந்து போய் இருப்பாள். எனக்கு யாருமே இல்லையே என்று எத்தனை தூரம் வியாகுலப்படடிருப்பாள்?
ஆனால் ஒரு நாள் அது அவள் வாழ்வின் மகிழ்ச்சியின் நாள். எங்கோ பிறந்த ஓர் ஏழைக்கு இத்தனை மேன்மையா? அவள் கண்களை அவளாலே நம்பமுடியவில்லை! ராஜா அவள் தலையில் கிரீடம் வைத்த அந்த இமைப்பொழுது, அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்காய் ஓடி இருக்கும்.
ஆம் பிரியமானவர்களே! இன்று யாருமில்லை எனக்கு. என்னை மதிப்பார் ஒருவரும் இல்லை என்கிறீர்களா? உங்களை அழைத்த தேவன் ஒருவர் உண்டு. அவர் கைவிடமாட்டார். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் நிச்சயம் உயர்த்துவார். பொறுமையாகக் காத்திருப்போம். அவர் பட்சபாதம் உள்ள தேவன் அல்ல. ஆமென்.
தேவன் உங்களோடிருக்கிறார். அவர் உங்களை வழிநடத்துவார் என்பதை நம்புங்கள். அவரது ஒருபோதும் கைவிடாத அன்பைப் பெற்று, விசுவாசத்தில் நாம் முன்னேறலாம்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments