கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. ஏசாயா-51:22
போராட்டங்கள் தோல்விகள் தொடர்ந்து வரும் போது, மனம் பேதலித்துப் போனவர்கள் நிலை குலைந்து காணப்படுவார்கள். அவர்கள் தான் தத்தளிப்பின் பாத்திரத்தை ஏந்தி இருப்பவர்கள்.
ஒரு சம்பவம் படித்தேன். ஒரு வயோதிபர், பத்திரிகை நிருபரிடம் தன் கண்ணீர் கதையைக் கூறினார். அதை வாசித்த போது என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அப்படி என்ன என்றால், அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவனைத் திருமணம் முடித்துக் கொடுத்தார். ஆனால் மருமகளோ சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். மகன் தற்போது பெற்றோரைப் பார்த்து, நீங்கள் தானே அவளை எனக்குத் திருமணம் முடித்து வைத்தீர்கள் என்று சண்டை போட்டுவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான்.
அந்த வயதானவர் கடலை வாங்கிச் சிறு பொட்டலம்(Packet) செய்து விற்பவர். பல மைல்கள் நடந்து போய் விற்க வேண்டும். வீட்டுக்கு வாடையாக 3000 ரூபாய் கட்ட வேண்டும். கொரோனா தொற்றின் நிமித்தம் ஜனங்கள் வாங்க பயப்படுகிறார்கள். சில நாட்களில் 4 அல்லது 5 பொட்டலங்கள் விற்கும். சில நேரம் ஒன்றுமே விற்காது. பகல் ஒரு டீ தான் தனது ஆகாரம் என்று கூறினவர், அந்த எமதர்மனுக்கும் கூட எங்கள் மேல் இரக்கமில்லையே என்ற சொற்கள் என்னை அசைத்தது.
ஆம் இன்று அநேகர் இப்படி ஏதோ ஒரு வகையில், ஒரு தத்தளிப்பின் பாத்திரத்தை கையில் ஏந்திய வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்காக வருகிற தேவ வார்த்தை தத்தளிப்பின் பாத்திரத்தை நீக்கிப்போடுகிறேன் என்பதே. விசுவாசியுங்கள்! வெற்றி நிச்சயம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
கர்த்தாவே, என் வாழ்வில் ஏற்படுகின்ற தத்தளிப்புக்கான காரணங்களை ஆராய்ந்து அறிந்து, மனந்திரும்பி வாழ உமது கரத்தில் என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments