தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார் Iசாமுவேல்-30:8
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள், என்று 3 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக இருக்கிறான். அவனோடு இருந்த மனுஷரும் அவனுக்கு விரோதமாக வந்துவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாது. ஆனால், இக்கட்டிலும் ஆபத்திலும் உதவி செய்யும் தேவனை அறிந்திருந்தான். எனவே தன்னைத் தேவனுக்குள் திடப்படுத்திக் கொண்டு, “ஆண்டவரே! அந்தத் தண்டை பின் தொடர்ந்து போனால், இழந்த யாவையும் திருப்பிக்கொள்ள முடியுமா?” என்று விசாரித்த போது, ஆண்டவர் அவனுக்குக் கொடுத்த பதில் “சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்”
ஆம் பிரியமானவர்களே, இன்று சுகத்தை இழந்து அல்லது பணத்தை இழந்து, வேலையை இழந்து, வீட்டை இழந்து, இன்னும் ஏதோ ஒன்றை இழந்து சமாதான சந்தோஷத்தை இழந்து வேதனையோடு இருக்கிறீர்களா? சகலத்தையும் திருப்பிக்கொள்ளும் வேளை வந்துவிட்டது. கலங்க வேண்டாம்! இயேசுவை விசுவாசியுங்கள். சகலத்தையும் திருப்பிக்கொள்வீர்கள் ஆமென்.
நம் வருத்தத்தின் மத்தியில் இயேசு நமக்கு நம்பிக்கையாயிருக்கிறார்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments