நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். ஆதியாகமம்-32:26
கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று தெளிவுற கூறுகிறதை நாம் காணலாம். இன்று உங்கள் தேவைகள் பிள்ளைகளின் தேவைகளைத் தேவனிடத்தில் கேட்க வேண்டும். காரணம் அவர் நிறைவாகக் கொடுப்பவர். ஒருவருக்கும் இல்லை என்று சொல்லாதவர். காரணம் அவரிடத்தில் சகலமும் சம்பூரணமாக இருக்கிறது என்று வேதம் கூறுகிறது
பாருங்கள், சாலமோன் ஆண்டவரிடத்தில் ஞானத்தைக் கேட்டான். ஆண்டவர் எப்படிப் பட்ட ஞானத்தைக் கொடுத்தார் தெரியுமா? “உனக்கு முன்னும் உனக்குப் பின்னும் ஒருவனும் உனக்கீடாக இருப்பதில்லை” என்று சொல்லி, ஞானத்தைக் கொடுத்தார். இன்று சாலமேனிலும் பெரியவர் நம்மோடிருக்கிறார். அவர் தம் பிள்ளைகளுக்கு அளவில்லாமல் கொடுக்க உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.
யாக்கோபு ஒரு நாள் தனித்து இரவெல்லாம் தேவனோடு போராடினான். எதற்காகத் தெரியுமா? ஆசீர்வாதத்தைப் பெற! ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தார். அவன் சந்ததியை ஆசீர்வதித்தார். பெரிய ஆசீர்வாதம் என்ன தெரியுமா? ஆண்டவர் தன்னை அறிமுகப்படுத்தும் போது, நான் யாக்கோபின் தேவன் என்பதை நாம் காண்கிறோம்.
அந்தத் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தால் மீட்டுக்கொண்ட தம்முடைய பிள்ளைகளின் சத்தத்திற்குச் செவி கொடுத்து, அவர்களை ஆசீர்வதிப்பது எவ்வளவு நிச்சயம்! உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளின் ஆசீர்வாதத்திற்காகவும், அவரை நோக்கிப் பாருங்கள். கர்த்தர் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
தேவன் நம் அருகிலேயே இருக்கின்றார். அவர் நம்மை அருமையாக வழிநடத்தி, நம் குழப்பங்களிலிருந்து வெளியேற்றி அவருடைய ஆசீர்வாதத்திற்குள் கொண்டு வருகின்றார்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments