யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா-44:21
அநேகர் என்னிடத்தில் வந்து “என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்று வினவும் போது, “மன்னிக்கவும்! கண்ட ஞாபகம் இருக்கிறது. ஆனால் சரியாக யார் என்பது தெரியவில்லை” என்பேன். அவர்கள் தங்களை இன்னார் என்றும், இப்படிப்பட்ட நிகழ்வில் உங்களைச் சந்தித்தேன் என்னும் போது, ஆம் இப்பொழுது ஞாபகம் வருகிறது என்பேன்.
சில நேரங்களில், நம்மிடத்தில் நன்மை பெற்றவர்கள் நம்மை மறந்துவிடும் போது வேதனை கொள்கிறோம். அது போல நெருக்கங்கள், வியாதி பிரச்சனை வரும் போது, தேவைகள் அதிகரிக்கும் போது ஜெபிக்கிறோம். ஆனால் பதில் இல்லை என்ற நிலையில் மனம் சோர்வுற்று, தேவன் என்னைக் கைவிட்டார்; என்னை மறந்தார் என்று புலம்புகிறோம்.
ஆனால் தேவனுடைய வார்த்தை என்ன தெரியுமா? பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன். சங்கீதம்-137:5-6 வாசித்துப்பாருங்கள் எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக. நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும் போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக. நம்மை விட்டால் அவருக்கு யாரும் இல்லை காரணம் அவர் நம் மீது அவ்வளவாய் அன்பு வைத்திருக்கிறார். ஏசாயா-49:16 இல் இவ்வாறு வாசிக்கிறோம் – இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்.
எனவேதான் நாம் வீதியில் நடக்கும் போதும், வாகனங்களில் செல்லும் போதும், தொழில் செய்யும் போதும், தம்முடைய தூதர்களை அனுப்புகிறார். எப்பொழுதும் அவர் கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட அப்பாவின் அன்பை நினைவு கூர்ந்து நன்றி அப்பா என்று அவருக்கு நன்றி செலுத்துங்கள். ஆமென்.
நம்மீது தேவன் வைத்துள்ள அன்பு, இயேசுவின் மூலம் வெளிப்பட்டது.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments