கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை ஏசாயா-51:22
என் நீதி எடுபடாமல் போனது. அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுகிறேன். என் நீதியை எடுத்துக் கூற யார் உண்டு? என்ற ஏக்கத்தோடு இருக்கும் தேவபிள்ளையே, உன்னை நோக்கிவரும் கர்த்தருடைய வார்த்தை – உனக்காக வழக்காடப்போகிறவர் உன் தேவனானவர்.
யோசேப்பு எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டான். ஒரு சிறைச்சாலை கைதி அங்கிருப்பவர்களிடம், நான் இங்கு வர எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னாலும், அவனுக்காக வாதாட ஒருவரும் இல்லை. அதேவேளை செய்யாத ஒன்றை செய்ததாகப் பொய் குற்றச்சாட்டு. யோசித்துப் பாருங்கள்! தேவனை உண்மையாக நேசித்துப் பரிசுத்த ஜீவியம் செய்யும் ஒருவனுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு நிலை வருமானால், அவன் தேவனைத் தான் தூஷிப்பான்.
ஆனால் யோசேப்பு தேவனை நேசித்தான். நடந்தது என்ன? பார்வோன் அவனை அழைத்தனுப்பி, தன் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லும்படி சொன்னான். அர்த்தத்தின் தன்மையை உணர்ந்த பார்வோன், யோசேப்பை கனப்படுத்தினான். மட்டுமல்ல அவனைத் தேசத்திற்கே அதிகாரியாக்கினான்.
எந்த ஒரு வழக்கறிஞர் யோசேப்புக்காக வாதாடினாலும், இப்படி ஒரு மேன்மை கிடைக்காது. தேவனே அவனுக்காக வாதாடினார். அவர் உங்கள் வாழ்விலும், உங்கள் நீதி விளங்க உங்களுக்காக வழக்காட போகிறார். வெற்றியையும் மேன்மையையும் புகழையும் அடையப் போகிறீர்கள். ஆமென்.
ஆண்டவரே, எனக்கு அசெளகரியத்தையும் அல்லது வேதனையையும் உண்டுபண்ணுகிற வாழ்க்கை சூழ்நிலைகளிலும் நீர் எப்போதும் என்னோடுகூட இருப்பதற்காக நன்றி
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments