கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை சங்கீதம்-16:8
ஓர் அருமையான பல்லவி
பெரும் புயல் வரினும்
பெரும் காற்று வீசிடினும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்
யார் அந்த அடிகளை உண்மையாக உணர்ந்து தைரியமாகப் படிக்க முடியும்? ஆம் கர்த்தரை தனக்கு முன்பாக வைத்திருப்பவன் மட்டும் இதைச் சொல்ல முடியும். காரணம் அவர் அசைக்கப்படமாட்டார் என்பதைத் தெளிவுற தெரிந்து கொண்ட மனிதன் விசுவாசித்துப் பாடுவான்.
ஒரு வாலிபன் தன் வேலையில் மிகவும் கவனத்தோடும், நேர்மையோடும், தன் கடமையைச் செய்யும் போது, அவனைப் பார்ப்பவர்கள் அவனுக்கு விரோதமாக ஏதாவது ஒன்றை செய்ய முனைவார்கள்.
பாருங்கள்! சிறைபிடிக்கப்பட்டுப் போன இடத்தில், தானியேல் உண்மையுள்ளவனாக நீதி கேடு செய்யாதவனாக இருந்தான். ஆனால் அவன் மீது பொறாமை கொண்டோர், அவனைச் சிங்கங்களுக்கு இரையாகக் கொடுக்கத்தக்கதாக முயன்ற போதும், தானியேல் அசையவில்லை. தன் உத்தமத்திலும், தேவனைத் தனக்கு முன் நிறுத்துவதிலும், உறுதியாக இருந்தான். ஆனாலும், தீயோரின் செயல்கள் அவனைச் சிங்கக் கெபியில் தள்ளிய போதும், சிங்கங்கள் அவனைச் சேதப்படுத்தவில்லை.
இன்று உங்கள் வாழ்விலும் இயேசுவை முன்வைத்தால் நீங்கள் அசைக்கப்படுவதில்லை! ஆமென்
அப்பா, என் வாழ்வின் புயல்களை என்னால் தவிர்க்க முடியாது. அனுதினம் வேத வார்த்தையின் படி வாழ்ந்து, உம்மில் உள்ள என் அஸ்திபரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள எனக்கு உதவியருளும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments