என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சங்கீதம்-144:1
எங்கோ? என்றோ? கேட்ட ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. செவ்விந்தியர்கள், தங்கள் பிள்ளைகள் தைரியமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய மகனின் கரத்தில் ஒரு வில்லையும், அம்பையும் கொடுத்துவிட்டு, “நடு இரவில், சிங்கம் அல்லது ஏதாவது பயங்கரக் கொடுமையான மிருகங்கள் வரும் போது, அம்பை எய்து அதை வீழ்த்திவிடு” என்று கூறிவிட்டு, அவனைத் தனியே விட்டுவிட்டுப் போய் விடுவார்கள். சிறுவன் அச்ச உணர்வோடு கண்விழித்துக்கொண்டு இருப்பான். அவன் எண்ணத்தில் “தான் தனியாக இருக்கிறேன்” என்பதே. ஆனால், அதுவல்ல உண்மை. அவனுடைய தகப்பன் வேறு ஒரு திசையில் இருந்து, மகன் மீது கண்களை வைத்தவண்ணம் இருப்பான். ஏதாவது துஷ்ட மிருகம் மகனை நோக்கி வரும்போது, மகன் குறிவைக்கும் முன்னே அம்பை எய்து தகப்பன் மிருகத்தை வீழ்த்திவிடுவான்.
பிரியமானவர்களே! நாம் பிசாசாகிய கொடிய துஷ்ட மிருகத்தை வீழ்த்திவிட வேண்டும் என்பதற்காகவே ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறார். “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்” என்று எபேசியர்-6:11 இல் வாசிக்கிறோம். தொடர்ந்து வாசிப்பீர்களேயானால் என்னென்ன ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறார் என்று அறியலாம். பாருங்கள் நியாதிபதிகள்-3:2 இல் “இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கானான் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்ட இஸ்ரவேல் புத்திரரை, யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். அன்று ஆவிக்குரிய இஸ்ரவேல் புத்திரராகிய நம்மை சாத்தானோடு யுத்தம் செய்ய பழக்குவிக்கிறார்”
இது பட்டயத்தால் செய்யும் யுத்தம் அல்ல; பதிலாக முழங்காலில் இருந்து ஜெயம் பெறத்தக்கதான யுத்தத்தை நமக்குப் பழக்குவித்திருக்கிறார். முழங்காலில் நின்று, சத்துருவை விரட்டி ஜெயம் பெறுங்கள். ஆமென்.
நம்மைச் சுற்றியுள்ள உலகமே நொறுங்கி விழும்பொழுது, கிறிஸ்துவே நாம் நிற்கும் உறுதியான கன்மலை.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments