கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம்-16:8
சங்கீதக் காரனாகிய தாவீது ஒரு வீரன்; ஒரே கல்லினால் கோலியாத்தை வீழ்த்தினவன்; இப்பொழுது அவன் ஒரு ராஜா. அவனுக்கு ஆலோசனைக்காரர் உண்டு. தங்கள் உயிரையும் அற்பமாக எண்ணும் மூன்று சேவகர்கள் அவனுக்கிருந்தார்கள். ஆனால், இவை எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையுடையவனாக இராமல், கர்த்தர் மேல் நம்பிக்கையுடையவனாக இருந்தபடியால், கர்த்தரை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைத்திருந்தான். அந்த நம்பிக்கை அவனை வெட்கப்படுத்தவில்லை.
சொந்த மகனாகிய அப்சலோம் அவனுக்கு விரோதமாக எழும்பின போது, தாவீதின் ஆலோசனைக்காரன் அகித்தோப்பேல் அப்சலோமை சார்ந்துகொண்டு, தாவீதுக்கு விரோதமாக ஆலோசனை கொடுத்தான். ஆனால், தாவீது கர்த்தரை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைத்திருந்தபடியால், கர்த்தர் அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்கி, தாவீதைப் பாதுகாத்தார்.
சில பிள்ளைகளுக்கு பரீட்சை என்றாலே பயம். ஆனால், கர்த்தரை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைக்கப் பழகிவிட்டார்களேயானால் வெற்றி மேல் வெற்றி நம்முடைய வாழ்வில் கிடைக்கும். கர்த்தரை முன்வைத்து ஓட்டத்தை ஓடுவோம். பாதுகாப்பும், வெற்றியும் நமக்குரியதே! ஆமென்.
கர்த்தருடைய கரத்தின் பாதுகாப்பில் இருக்கிறவனை ஒன்றும் அசைக்க முடியாது
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments