நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். சங்கீதம்-59:16
சங்கீதக்காரனாகிய தாவீது, ஆண்டவர் தனக்குச் செய்த பெரிய நன்மையை நினைத்துப் பார்க்கிறான். அதாவது சவுல் தாவீதை கொல்லுவதற்காக ஏவலாட்களை அனுப்பினான். தாவீது செய்வதறியாது இருந்த நேரம், கர்த்தர் தாவீதை அவர்களிடம் இருந்து பாதுகாத்தார். அதை நினைத்து நினைத்து பாடிய சங்கீதம்தான் இந்த 59ஆம் சங்கீதம்.
ஆண்டவரே உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன். காரணம் எனக்கு நெருக்கம் உண்டான நாளில் எனக்கு அடைக்கலமாக இருந்தீரே, உமக்கு நன்றி என்று சொல்வதைக் காணலாம்.
ஆம் பிரியமானவர்களே! நம்முடைய வாழ்விலும், பலவிதமான சோதனையின் நேரங்களில் தனிமையின் வேளையில் நம்மை ஆற்றித் தேற்றிய ஆண்டவர், மகனே மகளே என்னிடத்தில் உனக்கு ஓர் இடம் உண்டு. கலங்காதே! திகையாதே! நான் உன் தேவன். உனக்குத் துணை நிற்கிறேன் என்றுரைத்து, பாதுகாத்து வழி நடத்திவந்த எல்லா நன்மைகளையும் நினைத்துப் பாருங்கள். வியாதியின் நேரத்தில் மருந்தும் மருத்துவரும் கைவிட்டாலும், தேவன் உங்களையும் என்னையும் அணைத்துக் கொண்டாரே! அந்த அன்பை எண்ணிப்பாருங்கள். நன்றி சொல்லி தேவனை மகிமைப்படுத்துங்கள். ஆமென்.
இதுவரை தேவன் எனக்குத் தந்துள்ள மிக அதிகமான நன்மைகள் எவை? அவைகளைக் காணும்படி நம் கண்களைத் திறப்போமாகில் ஒரு நன்றியுணர்வுள்ள இருதயத்தை உருவாக்கிக்கொள்வோம்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments