Being Salt and Light in Zurich

யாருக்கு ஆசீர்வாதம்

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் மத்தேயு-7:7

இன்று அநேகர் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை.

ஒரு முறை பாஸ்டர் சாம் ஜெபத்துரை அவர்கள், கையில் ஒரு மோதிரத்தை வைத்துக் கொண்டு “இது யாருக்கு வேண்டும்?” என்று கேட்டார். முழு ஆலயத்திலுமே அமைதி! கூட்டத்தின் நடுவில் இருந்த ஒருவர் எழுந்து நின்றார். அவரை அழைத்தபோது, முன்னால் சென்று மோதிரத்தை வாங்கிக் கொண்டார். அதன் பின் கூடி இருந்தோர் “நான் போக நினைத்தேன்”; இன்னும் ஒருவர் “பயமாக இருந்தது”; இன்னும் ஒருவர் “அவர் வேடிக்கையாகச் சொன்னார் என்று நினைத்தேன்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

இன்று நம்மில் அநேகர் தேவனுடைய வார்த்தையை விசுவாசியாமல், தங்களுக்குள்ளேயே கற்பனை செய்து கொண்டு வாழ்கிறார்கள். ஆம் இயேசு கூறியது போல, சிறுபிள்ளையாக மாறாவிட்டால், நாம் ஆசீர்வாதங்களைப் பெறமுடியாது. ஒரு போதகர் அரேபிய தேசத்திற்கு ஊழியத்திற்குப் போகும் போது, ஒரு சிறு பிள்ளை “அங்கிள்(uncle) நீங்கள் திரும்பி வரும்போது எனக்கு ஓர் ஒட்டகம் வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்றதாம். அதை விமானத்தில் கொண்டு வரமுடியுமா? இல்லையா? என்ற எந்தக் கேள்வியும் இல்லை. தேவையை முன்னிறுத்திய குழந்தையைப் போல மாறும்போது வெற்றி பெற முடியும்.

யாக்கோபை பாருங்கள். நீர் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற போது, தேவன் மறுத்தாரா? இல்லையே! அப்படியானால் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். கேட்கிற எவனுக்கும் கொடுக்கப்படும். கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான். ஆமென்.


நம்முடைய வாழ்வின் தாழ்வான சமயங்களிலும் தேவன் நம்மோடு நடந்து வருகிறார். பள்ளத்தாக்குகளிலும் ஆசீர்வாதங்களை கண்டுகொள்ள தேவன் வழிசெய்வார்.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/

Live

0 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *