Site icon Bethel Tamil Christian Church Switzerland

நல்ல அறிக்கை பண்ணு

நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன் சங்கீதம்-30:6

பவுல் தீமோத்தேயுவைக் குறித்துச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியுங்கள். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்

மோசே இஸ்ரவேலின் கோத்திர பிதாக்களைப் பார்த்து, “நாம் சுதந்தரிக்கப் போகிற கானான் தேசம் எப்படிப்பட்டது? என்று பார்த்து வாருங்கள்” என்று கோத்திரத்துக்கு ஒருவராக அனுப்பினான். சென்றவர்கள் அங்கிருந்து பழங்களைக் கொண்டுவந்தார்கள். கூடவே துர்ச்செய்தியையும் கொண்டு வந்தார்கள். அதாவது, “அங்கிருக்கும் மனிதர் இராட்சதர். நாம் அவர்கள் பார்வைக்கும் எங்கள் பார்வைக்கும் வெட்டுக்கிளிகளைப் போல இருந்தோம். எனவே நாம் அதைச் சுதந்தரிக்க முடியாது” என்றார்கள்.

ஆனால் யோசுவாவும் காலேபும், “அப்படியல்ல! நாம் உடனே போய் இலகுவாக அதைச் சுதந்தரிக்க முடியும்” என்றார்கள். சென்றது ஒரே இடம்! இரண்டு விதமான கருத்துகள். காரணம் என்ன? வித்தியாசமான பார்வை.

ஒரு முறை டாக்டர் பால் யாங்கிசோவிடம் ஒரு தாய், தன் மகள் இரவில் குடித்துவிட்டு மிகவும் நேரம் சென்று வருகிறாள் என்று கூறியபோது, அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “இன்று முதல் மகளை ஒரு தேவ ஊழியக்காரியாகப் பார்” என்றார். ஊழியக்காரரின் வார்த்தைக்கு அந்தத் தாய் கீழ்படிந்து செயல் பட்டார். இன்று அந்தச் சபையில் ஓர் ஊழியக்காரியாக இருக்கிறாள்.

ஆம் பிரியமானவர்களே! பார்வை நன்றாக இருந்தால், அறிக்கையும் நல்லதாக இருக்கும். காலையில் எழும்பும் போதே, முடியாது என்ற பார்வையோடு நித்திரையைவிட்டு எழும்பாமல், இன்று தேவ பெலத்தால் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவேன் என்ற தெளிவுள்ள பார்வையோடு, நல்ல அறிக்கை பண்ணி வெற்றிபெற வாழ்த்துகிறேன்! ஆமென்.


தேவன் நமது சந்தேகங்களை தைரியமான விசுவாச அறிக்கைகளாக மாற்றுவார்.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version