நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். கொலோசெயர்-3:1
பூமிக்குரியவைகள் பரலோகத்துக்குரியவைகள் என்று இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றவர்கள், மேலானவைகள் எவையோ அவைகளையே தேட வேண்டும்.
ஒரு வானொலிப் பெட்டியை அல்லது தொலைக்காட்சி பெட்டியையோ வாங்கிய ஒருவர், அதை இயக்க வேண்டுமானால் அதற்குரிய கையேட்டை(Catalog) படித்தால் அதைச் சரியாக இயக்க முடியும். அல்லது அதை இழக்க நேரிடும். அதுபோல மேலானவற்றைத் தேட வேண்டுமானால், பரிசுத்த வேதாகமாகிய கேட்லொக்கை(Catalog) சரியாகப் படித்தால் மேலானதை அடைய முடியும். அல்லது அதை இழக்க நேரிடும்.
பிரியமானவர்களே! பரிசுத்த வேதாகமம் ஒருவருடைய வாழ்வில் செய்வது என்ன? ஒரு முறை ஒரு பெரியவர் வேதத்தை வாசித்தபோது, அவருடைய பேரன் “தாத்தா! எப்பொழுது பார்த்தாலும் இதை வாசித்துக் கொண்டே இருக்கிறீர்களே, ஏன் தாத்தா?” என்று வினவினான். அதற்குத் தாத்தா, ஒரு மூங்கில் கூடையை கொஞ்சம் அழுக்கு பிடித்த கற்களால் நிரப்பி அதில் தண்ணீரை ஊற்றினார். பின்பு பேரனைப் பார்த்து நான் நிறுத்த சொல்லும் வரை தண்ணீர் மொண்டு ஊற்றச் சொன்னார். பேரன் ஊற்றினான். தண்ணீர் நிற்கவில்லை! தாத்தாவைப்பார்த்து “தாத்தா! தண்ணீர் நிற்காத கூடையில் தண்ணீர் ஊற்ற சொல்லுகிறீர்களே?” என்றபோது, தாத்தா கேட்டார் “உள்ளே இருக்கும் கற்கள் எப்படி இருக்கிறது?” என்றபோது, “அவை சுத்தமாகிவிட்டன” என்று பதில் சொன்னான். அந்தத் தாத்தா பேரனைப் பார்த்து, “இப்படித்தான் வேதவசனமாகிய தண்ணீர் உள்ளத்தில் விழும்போது, உள்ளே சுத்தம் ஏற்படுகிறது” என்றார்.
ஆம் பிரியமானவர்களே! உள்ளம் சுத்தமாகும்போது, பரிசுத்தமானது நம்முடைய வாழ்க்கையில் மேலானவற்றைத் தேட உதவிடும். எனவே பரிசுத்த வேதாகமாகிய சத்திய வசனத்தைக் கொண்டு மேலானவற்றைத் தேட கர்த்தர் உதவி செய்வார் ஆமென்.
இவ்வுலக வாழ்க்கை மிகவும் சிறந்ததாக இருந்தாலும், அதைவிடச் சிறந்த வாழ்க்கை இனிமேல் தான் வர இருக்கிறது. பரலோகத்தின் ஒளியில் பூலோகத்தில் வாழ்வது மிகப்பெரிய சிலாக்கியமாகும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments