அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர்-12:1
ஒரு சிங்கக் குட்டிக்கு ஒரு முயல் குட்டி நண்பனாக இருந்தது. இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். இரண்டு பேருடைய பிறந்த நாளும் ஒன்றே. அன்று இருவருடைய பிறந்த நாள். சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருந்தபடியால், எல்லா மிருகங்களும் சிங்கத்தின் பிறந்த நாளுக்குச் சென்றன. மிகவும் விமரிசையாக நடந்தேறினது. முயலும் தன் பெற்றோருடனும், சகோதரரோடும் தன் பிறந்த நாளை கொண்டாடினது. மறுநாள் சிங்கக்குட்டி தன் நண்பனைப் பார்த்து ஏன் வரவில்லை என்பதைக் கேட்க புறப்பட்டது. சிங்கத்துக்குப் பசியோ தாங்க முடியவில்லை! எதிரே ஒரு முயல். அதை விரட்டி பிடிக்க முயன்றபோது, ஓடி ஒரு குழிக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.
அவ்வேளை தன் நண்பனான முயல் வருவதைக் கண்டு, கோபத்தோடு “போ! இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்” என்றது. அமைதியாக, நடந்தது என்ன என்று விசாரித்த போது எல்லாவற்றையும் கூறியது சிங்கம். அப்பொழுது முயல், “உன் பசிக்கு ஆகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக, நட்பே வேண்டாம் என்கிறாயா? அந்த முயல் ஓடி ஒளித்துக் கொண்டது. ஆனால் உன் பசிக்கு இன்னும் ஒரு முயல் இருக்கிறது. அடித்துப் புசி!” என்று தன்னை ஒப்புக் கொடுத்தது. சிங்கம் மனமுடைந்தது. “பசியல்ல! உன் அன்பே என் பசியை ஆற்றிவிட்டது” என்று கூறி கட்டித்தழுவியது.
பிரியமானவர்களே! இவ்விதமாக நமக்காகத் தம்மையே ஒப்புக் கொடுத்தவர் நம்முடைய ஆண்டவர். அந்த அன்பை நினைத்துப்பாருங்கள். அப்பொழுது உங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க முடியும். ஆண்டவருடைய அன்பை நினைத்துப் பாருங்கள். உள்ளம் ஆனந்தத்தால் நிரம்பி வழியும். ஆண்டவருக்காக வாழவும் முடியும். முயல்வீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
நன்றி, பிதாவே, மிகச் சிறந்த ஈவாக உமது குமாரனைத் தந்தீர்! உம்முடைய தயாள குணத்தை, நானும் மற்றவர்களிடம் காட்ட எனக்கு உதவியருளும்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments