சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும் நீதிமொழிகள்-30:26
முயல்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகுள்ளவை. அது மட்டுமல்ல மிகவும் சாதுவானவையும் கூட. அந்தப் பலவீனமான ஜெந்து, எல்லோரையும் கவர்ந்து கொள்ளும். ஆனால், காட்டிலே சுதந்திரமாக உலாவ முடியாத முயல்கள், புதர்களிலே ஒளித்திருந்து தங்கள் இரையைத் தேடும்.
இப்படிப்பட்ட முயல், தனக்கு ஒரு வீட்டை கட்டுமாம். அது எங்கே என்றால், கன்மலையில். காரணம் என்ன? அதுதான் அதற்குப் பாதுகாப்பு மற்றும் அரண். ஆம் பிரியமானவர்களே! சத்துருக்களிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள, சரியான ஒரு வீட்டை அமைத்துக் கொள்ள, ஒரு சரியான இடத்தைத் தேடுகிறது.
நாம் இந்த உலகில் வாழுகிறோம். சத்துருவாகிய பிசாசிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டுமானால், ஒரு கன்மலையுண்டு. அந்தக் கன்மலைதான் கர்த்தராகிய இயேசு. அதற்குள் ஒரு மறைவிடம் உண்டு. அங்கே அடைக்கலம் புகுவோர் பயமின்றி ஜீவிக்கலாம். ஆம், தெரிந்து கொள்வோம் அந்தக் கன்மலையின் மறைவிடத்தை! சுகமாகப் பயமின்றி வாழ்வோம். ஆமென்.
நம்மைச் சுற்றியுள்ள உலகமே நொறுங்கி விழும்பொழுது, கிறிஸ்துவே நாம் நிற்கும் உறுதியான கன்மலை.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments