Site icon Bethel Tamil Christian Church Switzerland

பட்டுப்போகும் வாழ்வு

கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும். யோபு-18:16

அருமையான தேவபிள்ளைகளே, என்ன அருமையான ஒரு வெளிப்பாடு! வேர் நிலைத்திருந்தால் இலைகள் செழிப்பாகக் காணப்படும். இது எதைக் குறிக்கிறது? கிறிஸ்துவோடு இருக்கும் ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது.

நீங்கள் யோவான் 15 ஆம் அதிகாரத்தை வாசிப்பீர்களானால், இயேசு சொன்னார் “நானே செடி நீங்கள் கொடிகள். ஒருவன் என்னில் நிலைத்திருந்தால், அவன் செடியில் நிலைத்திருப்பான் அல்லது அக்கினிக்கிரையாவான்”. நாம் கிறிஸ்துவை விட்டு விலகும் போது, நமது செழிப்பு அற்றுப்போகும். எப்படி நம்முடைய வாழ்வு கிறிஸ்துவை விட்டு விலகும் என்றால், நம்முடைய பாவமே கிறிஸ்துவைவிட்டு பிரிக்கும். இரட்சிப்பு இழக்கப்படும் பட்சத்தில், அவமானமும் நிந்தையும் வேதனைகளும் பெருகும். பிசாசின் ஆட்சிக்குட்படுத்தப்படுகிறான்.

எனவே இந்த மேலான இரட்சிப்பை மிகவும் கவனத்தோடு காத்துக் கொள்ள வேண்டும். எனவே பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது கிறிஸ்துவோடு இரைக்கப்பட்டிருப்பீர்கள். செழிப்புள்ள நம் வாழ்வை காணும் போது, மற்றவர்களும் கிறிஸ்துவை அண்டிக் கொள்வர். ஆமென்.


அப்பா, என்னுடைய வாழ்வு, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வேர் விட்டுள்ளது என்பதைக் காட்டும் படியாக, கனிகளைக் கொடுக்க என்னை பெலப்படுத்தியருளும்.


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version