நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் மத்தேயு-5:14
இயேசு நம்மைப் பார்த்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்கிறார். முதலாவது, நாம் எங்கிருந்தோம் என்பதைச் சற்றுக் கவனிப்போமானால், நாம் எந்த நிலையிலிருந்தோம் என்றும், எப்பேர்ப்பட்ட நிலைக்கு நாம் மாற்றப்பட்டோம் என்பதைத் தெளிவுற அறிந்து கொள்ளலாம்.
நாம் அந்தகார இருளில் இருந்தோம் என்று பேதுரு எழுதுகிறார். இருள் நம்மை மூடி இருந்தது. சுவிட்சர்லாந்து தேசத்தில் குற்றவாளிகளுக்கு நிரந்தரத் தண்டனை கொடுப்பதற்கு முன், துளியேனும் வெளிச்சம் இல்லாத இருட்டறையில் அடைப்பார்கள். அந்த அனுபவத்தைப் பெற்ற ஒருவரை நான் சந்தித்தபோது, அவர் என்னிடம் இவ்விதமாகக் கூறினார். “கையில் ஏதாகினும் கிடைத்திருந்தால் தற்கொலையே செய்திருப்பேன். அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான நிலை” என்று விவரித்தார்.
ஆம்! நாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள்தான். கிருபையினால் நாம் இன்று வெளிச்சத்தின் பிள்ளைகளானோம். இயேசு ஒளியாக இருக்கிறார். அவருடைய பிரகாசத்தின் ஒளி நம்மீது பட்டதினால், அந்த வெளிச்சம் நம்மைப் பிரகாசிக்கச் செய்தது. எனவே உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்து கொள்வோம். ஆமென்.
இயேசுவின் ஒளியை நீங்கள் உலகத்தினுள் பிரகாசிக்கச் செய்து, இவ்வுலகை வெளிச்சமாக்குங்கள்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments