Site icon Bethel Tamil Christian Church Switzerland

நிதானித்து அறிந்தால்

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் I-கொரிந்தியர்-11:31

நாம் நம்மை நிதானிக்க வேண்டும் என்று வேதம் எடுத்துரைப்பதை பார்க்கிறோம். அநேக நேரங்களில், நாம் மற்றவர்களை நிதானித்து, அவர்களிடம் காணப்படும் குறைகளைக் கண்டு மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு ஆனந்த மகிழ்ச்சியடைகிறோம். இதற்காகவே சிலரை ஆண்டவர் படைத்திருப்பாரோ? என்று எனக்குள்ளே யோசிப்பது உண்டு.

வாழ்வில் தன் நிலை நிதானிப்போர் எவரும் பிறர் நிலை நோக்கினோர் அல்ல. அவர்கள் தங்களையே நிதானித்து வீண் விகாரங்களில் தலையிட்டுத் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளவும், மற்றவர்களால் உதாசீனப்படுத்தி விலக்கி வைக்கப்பட்டவர்களாகவோ காணப்படமாட்டார்கள். இவர்கள் ஓய்வின்றித் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை நிதானிப்போர் தங்கள் வாழ்வை இருள் மயமாக்கியோர் ஆவர்.

காரணம் இவர்கள் தங்களுக்கு ஏதாகினும் வேலை இல்லை என்பர். இயேசு சிலரைப் பார்த்து கேட்ட கேள்வி என்ன தெரியுமா? “சும்மா நிற்பது என்ன?” என்று. அவர்கள் சொன்ன பதில் – “எங்களுக்கு ஒருவரும் வேலை தரவில்லை”. “அப்படியானால் தோட்டத்தில் போய் வேலை செய்யுங்கள்” என்று கட்டளை கொடுத்தார்.

இன்று நாமும் ஒரு நல்ல தீர்மானம் எடுப்போம். தேவனுடைய வேலையைச் செய்ய நேரத்தை பிரயோஜனப்படுத்துவோம். அப்பொழுது நாம் யாரையும் நிதானிக்க நேரமிராது. நம்மை நிதானிக்கும் போது, நம்முடைய விசுவாசத்தின் அளவு பரிசுத்தத்தின் அளவு என்ன என்பதைக் கண்டு, நம்மைச் சரி செய்யும் போது நாம் நியாயந்தீர்க்கப்படோம். சிந்திப்போம்! செயல்படுவோம்! வருகை சீக்கிரம். ஆயத்தமாவதற்கு இதுவும் ஒரு வழி. ஆமென்.


இப்பொழுதும் கூட தேவன் முன்பு நம்மை நாமே நிதானித்து பார்த்து, நம்மை காயப்படுத்தினவர்களை நாம் இன்னும் மன்னியாமல் இருப்போமானால், இயேசுவின் மாதிரியைப் பின் பற்றி அவர்களுக்கு அவருடைய அன்பை வெளிப்படுத்த நல்ல தருணம் இதுவே


உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/


Exit mobile version