நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும் சங்கீதம்-13:5
இன்று மனிதனுக்கு, தான் எதிர்பார்த்த காரியம் கைகூடும் போது இருதயம் களிகூறுகிறது. உதாரணமாக, பள்ளியில் படிக்கும் பிள்ளைகள், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறும்போது மகிழ்சியடைகிறார்கள். சில வாலிப பிள்ளைகள், திருமணம் கைகூடும்போது மகிழ்ச்சியடைகிறார்கள். வீடோ, வாகனமோ அல்லது நினைத்த குடும்ப வாழ்க்கையோ அமையும் போது இருதயம் களிகூருகிறதை காணலாம். அப்பொழுது தான் வரும் அல்லேலூயா பாட்டு! சபையில் சாட்சியின் கெம்பீரத் தொனியையும் கேட்கலாம்
அருமையான தேவபிள்ளையே, ஆபகூக் தீர்க்கதரிசி சொல்வதை கவனியுங்கள்.
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆபகூக் 3:17-18
இன்று நம்மில் எத்தனைபேருக்கு இப்படி அறிக்கை செய்ய முடியும்? தாவீது ராஜாவுக்கு என்ன குறையிருந்தது? கைபிடிக்க ஒரு ஆள், கால்பிடிக்க ஒரு ஆள் என்று எத்தனை பேர்! ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் அல்லது ஆட்டுக்கால் சூப் உடனுக்குடன் கிடைக்கும். இனிமையான பாடல்களா, நடன காட்சிகளா, இன்னும் எத்தனை இருந்த போதும், தாவீதின் இருதயம் அவற்றினால் கவர்ந்திழுக்கப் படவில்லை. மாறாக, தேவனுடைய இரட்சிப்பின் மேன்மையானது அவன் இருதயத்தை களிகூறச் செய்தது. உங்கள் இருதயத்தை களிகூறச் செய்வது எது? கர்த்தருக்குள் களிகூறுவோம் ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments