அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5:7
என்ன அருமையான வாக்குத்தத்தம் பார்த்தீர்களா? இன்றைக்கு நம்முடைய கவலைகளில் யார் பங்கெடுப்பார் யாரிடம் பகிர்ந்து கொள்ளளாம் என்ற பெருமூச்சுடன் திகைத்து நிற்போர் அநேகர். ஆனால் ஆண்டவர் சொல்கிறார் உன் கவலைகளை எல்லாம் என் மேல் வைத்துவிடு என்று அன்போடு கூறுகிறார். ஆனால் நாம் தயங்குகிறோம்.
ஒரு நாள் ஒரு அம்மா மேடான பாதை வழியாக ஒரு பெரும் சுமையை சுமந்து கொண்டு நடப்பதை ஒரு வண்டிகார ஜயா பார்த்தார். அவருக்கு அவருடைய தாயார் நடப்பது போல உணர்ந்தார். உடனே வண்டியை நிறுத்திவிட்டு அந்த அம்மாவை பார்த்து, அம்மா வாங்கள்; நான் போகிற வழிதான் உங்களை கொண்டு போய் விடுகிறேன் என்று வண்டியில் ஏற்றிக் கொண்டார். சற்று தூரம் கடந்த பின்னர் வண்டியில் பெருமூச்சின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி! அப்படி என்ன? அந்த அம்மா தலைமேல் இருந்த சுமையை சுமந்துகொண்டிருப்பதை பார்த்து வியந்து போனவராக, அம்மாவை பார்த்து, அம்மா நீங்கள் சுமையோடு நடப்பதை பார்த்துத்தான் உங்களை ஏற்றினேன் என்றவுடன், அந்த அம்மா சொன்னார்கள் – “தம்பி எனக்கு மட்டும்தான் இடம் கொடுத்தாய் என்று நினைத்தேன்”
இன்று அநேகர் இப்படித்தான் இரட்சிப்பு மட்டும்தான் எனக்கு என்று நினைக்கிறார்கள். இல்லை பிரியமானவர்களே, இயேசு உங்கள் கவலைகள் பாரங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டார். எனவே உங்கள் கவலைகள் எல்லாவற்றையும் அவர் மேல் வைத்துவிட்டு, ஸஂதோத்திரம் இயேசுநாதா ஸஂதோத்திரம் இயேசுநாதா என்று பாடிக் கொண்டு வீர நடை போடுங்கள். ஆமென்
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments