கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
சங்கீதம்55:22
இன்று அநேகர் பலவிதமான பாரங்களை சுமந்துகொண்டு, இந்த சுமையை எங்கே இறக்கி வைக்கலாம்? யார் உதவி செய்வார்? என்ற ஏக்கத்தோடு இருப்பதை அவதானிக்கலாம். ஒருவேளை, வியாதி, கடன் தொல்லை, சரியான வதிவிட வசதியின்மை, சரியான வேலையில்லாமை, சரியான ஒரு வீடு இல்லையே, பிள்ளைகள் கீழ்படிய மறுக்கிறார்களே இப்படி பல பாரங்களை சுமந்து கொண்டு கண்ணீரோடு வாழ்பவர்தான் எத்தனை பேர்.
ஒரு முறை ஒரு நண்பரை சந்தித்தேன். தலையில் இருந்த அத்தனை முடியும் கொட்டி, முழு மொட்டையாக காணப்பட்டார். காரணத்தை அறிந்த போது, குடும்பத்தில் அவர் மூத்த பிள்ளை; தகப்பன் இல்லை. எனவே சகோதரிகள் திருமணம், சகோதர்களை வெளிநாட்டிற்கு வர உதவிகள் எல்லாம் செய்து தன் பாரத்தை எல்லா இறக்கி வைத்துவிட்டு, திருமணவயதை தாண்டிய பின், ஒரு பெண்னை திருமணம் செய்தார்.
எத்தனையோ பேர் வாழ்விலும் இப்படிபட்ட ஒரு நிலையா? மனம் தளரவேண்டாம். அன்போடு அழைக்கும் இயேசுவிடம் வாருங்கள். உங்கள் பாரத்தை இறக்கி வையுங்கள். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். ஆமென்
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments