நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் யோவான்-10:11
கரடி சிங்கம் இன்னும் அநேக காட்டு மிருகங்கள் ஆடுகளை பீறிப்போட்டு தங்கள் வயிற்றை நிரப்ப ஆசையாக சுற்றித்திரிகிறது. இந்த வேளையில் அவைகளின் வாய்க்கு தப்புவிக்கத்தக்க ஒரு பெலமுள்ள ஒரு மேய்ப்பன் அவசியம். ஆம் பிரியமானவர்களே, நம்முடைய பிரதான மேய்ப்பனாகிய இயேசு யுத்தத்தில் வல்லவர். பாருங்கள், பார்வோனும் அவனுடைய சேனையும் இஸ்ரவேல் ஜனங்களை வேட்டையாட வேண்டும், தன் பசியை ஆற்ற வேண்டும் என்று வேக வேகமாக வந்தான். நடந்தது என்ன? தமது மந்தையாகிய இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும்படி, அவர் செங்கடலை இரண்டாக பிரித்தார். வேட்டையாட வந்த பார்வேனின் ஆசை ஆழியில் அமிழ்ந்து போயிற்று.
பிரியமான தேவ பிள்ளையே, பிசாசாகிய கொடிய மிருகம் நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் பீறிப்போடவும், தனது ஆசையைத் தீர்க்கவும் நம்மை சுற்றிதிரிந்தாலும், அவனிடம் இருந்து நம்மை பாதுக்காக்க நமது மேய்ப்பனாகிய இயேசு, உயிருள்ளவராக நம்மோடு இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் தாமே தமது ஜீவனை நமக்காக கொடுத்தார் கலங்காதிருங்கள். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments