Being Salt and Light in Zurich

நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்புவேன்

அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண் காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன். என்று கர்த்தர் சொல்லுகிறார். செப்பனியா-3:20

இன்று அநேகர் வியாதி, பணநெருக்கடி, தனிமை மற்றும் மனவேதனை போன்ற அநேக விதமான சிறைகளில் அடைக்கப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள். இவற்றில் இருந்து எப்படி விடுதலையாக முடியும்? யார் என்னை விடுவிப்பார்? என்கிற அங்கலாய்ப்போடு வாழ்கிறார்கள். சிலர், நம்பிக்கையற்றவர்களாக கண்ணீரோடு காணப்படுகிறார்கள்.

பேதுருவை கொலை செய்யும்படி, காவல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, இரவு நடு ஜாமத்தில் தேவன் தமது தூதனை அனுப்பி அவனை விடுதலை செய்தார். பவுலையும் சீலாவையும சிறையில் அடைத்தார்கள். இரவு சிறைச்சாலையின் அஸ்திபாரத்தையே அசைத்து, கதவுகளை திறந்து, அவர்களை விடுதலை செய்த அதே தேவன், உங்கள் சிறையிருப்பை மாற்றமாட்டாரா? கவலையை விடுங்கள்! பவுலையும் சீலாவையும் போல பாடித்துதியுங்கள். உங்கள் சிறையிருப்பை தேவன் திருப்புவார். அப்பொழுது சொப்பனம் காண்கிறவர்களைப் போல் இருப்பீர்கள் என்று வேதம் சொல்கிறது. ஆமென்

உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!



பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்

www.betheltamilchurch.com/worship-live/

Live

0 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *