நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா 1:5
ஆபிரகாம் தன் மனைவி சாராள் இருவரும் ஒரு நாள் நடந்து போகும் போது, அபிமலேக்கு ஆட்களை அனுப்பி சாராளை கொண்டு போய் விட்டான். உன்னைவிட்டு விலகமாட்டேன் என்று சொன்ன ஆபிரகாம் செய்வதறியாது திகைத்து நின்றான். ஆபிரகாமை அழைத்த தேவன் விட்டுவிடுவாரோ? இல்லை! இல்லை!
நடுராத்திரி, அபிமலேக்கிற்கு தரிசனமானார். “அபிமலேக்கே, யாரை அழைத்து வந்தாய்? உடனே விட்டுவிடு இல்லையேல் நீ செத்தாய்“ என்று சொன்னவுடன் பயந்து போனான் அபிமலேக்கு. பின்னே என்ன, உடனே, அம்மா போய் வாருங்கள் என்றான்.
இன்று உங்கள் உடைமைகளை அபகரித்து உங்களை கண்ணீரோடு இருக்க வைத்திருக்கிறார்களா? பயப்பட வேண்டாம். வாக்குத்தத்தை பிடித்து ஜெபியுங்கள். கர்த்தர் வார்த்தையை உறுதிப்படுத்துவார்.
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments