நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா 1:5
இங்கே, “நான் மோசேயோடு இருந்தது போல” என்று வாசிக்கிறோம். இந்த வார்த்தை, யோசுவாவிற்கு ஒரு உறுதி மொழியாக கொடுக்கப்பட்டது. இந்த யோசுவா வனாந்திரப்பாதையில் தேவன் மோசேயோடு இருந்ததை மட்டும் தான் அறிந்திருப்பார். ஆனால், மோசே பிறந்த போது, பார்வோனால் ஒரு கட்டளை பிறந்தது. அதாவது, பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கொன்று போடவேண்டும் என்று மருத்துவச்சிகளுக்கு கட்டளையிட்டான்.
நடந்தது என்ன? மருத்துவச்சிகள் கர்த்தருக்கு பயந்ததினால் ஆண் குழந்தைகளை தப்பவிட்டார்கள் என்று வாசிக்கிறோம். சரி. சற்று சிந்தித்துப் பாருங்கள். மோசே மூன்று மாதம் அளவும் மறைத்து வைக்கப்பட்டார். எகிப்திய காவல் படை, வீட்டின் முன்னால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை, மோசேயின் வீட்டு வாசலை கடந்து போயிருப்பார்கள். பிள்ளை அழாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக அழுதிருக்கும். ஆனால், அந்த காவல் படை வீரர்களின் காதுகளில் கேட்காதவண்ணம் கர்த்தர் காதுகளை அடைத்திருப்பார்.
அப்படியானால், எனக்கு பிரியமானவர்களே, உங்கள் சத்துருவுக்கு உங்களை மறைத்து நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; என்று வார்த்தையை உறுதிபடுத்துவார். கலங்கவேண்டாம்! பயப்படவேண்டாம்! திடன்கொள்ளுங்கள்! ஆமென்
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments