அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5:7
அருமையான தேவ பிள்ளைகளே மே மாதம் முதலாம் திகதி உங்களை இணையதளத்தின் மூலமாக தொடர்பு கொள்வதையிட்டு எண்ணற்ற மகிழ்சி கொள்கிறேன்.
இந்த நாளின் தியானத்திற்காக நான் உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள வாஞ்சிக்கும் வேத பகுதி – அவர் உங்களை விசாரிக்கிறவர்.
இன்று அநேகம் பெற்றோர் விசாரிப்பற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறார்கள். சில பிள்ளைகள் அனாதைகளைப்போல காணப்படுவதையும், திருமணமுடித்த எத்தனையோ சகோதரிமார் கண்ணீரோடு விசாரிப்பற்று இருப்பதையும் காணலாம். நாம் நம்பும் அல்லது நாம் நேசிக்கும் மனிதர்கள் நம்மை விசாரிக்காமல் விடலாம். ஆனால் நம்மை விசாரிக்க ஒருவர் உண்டு; அவர் தான் நமதருமை ஆண்டவர்.
பாருங்கள், பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம். அங்கே முப்பத்தெட்டு வருஷம் படுத்த படுக்கையாக ஒரு மனிதன். அவனுக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை. ஆனால் அவனை தேடி இயேசு வந்தார். அவனுடைய பரிதாபமான நிலையை கண்ட இயேசு அவனைப்பார்த்து எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
அதே இயேசு, உங்கள் வாழ்விலும் விசாரிக்கிறவராக அற்புதம் செய்பவராக இருக்கிறார். கலங்க வேண்டாம். அவரிடம் உங்கள் நிலையை கூறுங்கள். நிச்சயமாக உங்களுக்கு அற்புதம் செய்வார்
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments