நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம்-12:2
இன்று, தங்கள் பெயரைப் பெருமிதப்படுத்த, எத்தனையோ வழிகளை கையாளுகிறார்கள். அதற்காக, தங்கள் ஜீவனையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆச்சரியப்படுகிறீர்களா? பாருங்கள். சாகச சாதனைகளை செய்வோர், உயரமான கயிற்றில் நடப்பார்கள். பார்ப்பவர்களுக்கே பயமாக தோன்றும்.
ஒரு பழமொழி சொல்வார்கள் – கரணம் தப்பினால் மரணம். அப்படிப்பட்ட பயங்கரமான செயல்களில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன? எப்படியாகிலும், சாதனை வீரன் அல்லது வீராங்கனை என்ற பெயருக்கு சொந்தக்காரனாக வேண்டும் என்பதே. ஆனால், அந்தப் பெயரை வெல்லும் வண்ணமாக மற்றொருவர் எழும்புவார். அப்பொழுது இவர் பெயர் மங்கிவிடும். ஆனால், கர்த்தர் ஒருமனிதனுடைய பெயரை பெருமிதப்படுத்தினால், யாரும் அதை மேற்கொள்ள முடியாது! வேதத்தில், சாலமோன் ராஜாவின் பெயரை, கர்த்தர் எவ்விதமாக பெருமைப்படுத்தினார் பாருங்கள் – உனக்கு முன்னும் உனக்கு பின்னும் உனக்கு சரியாக ஒருவன் எழும்புவதில்லை.
அதே தேவன், உங்களையும், உங்கள் பிள்ளைகளின் பெயரையும் பெருமைப்படுத்தும் போது, யாரும் அதற்கு சரியாக எழும்ப முடியாது. விசுவாசியுங்கள்; நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள். ஆமென்
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments