நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். ஏசாயா-12:3
இரட்சிப்பு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். மிக இலகுவாக நாம் பெற்றுக் கொள்ள முடியும். காரணம் இந்த பெரிய இரட்சிப்பை நாம் சுதந்தரித்துக் கொள்ள இயேசு கிறிஸ்து விலைக்கிரயமாக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார். இந்த இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளாவிடில், நாம் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்வது கடினமாகும்.
அப்போஸ்தலர்-16:30-31 ல் நாம் வாசிப்பது, சிறைச்சாலை அதிகாரி பவுலைப் பார்த்து கேள்வி ஒன்றை கேட்கிறான். இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?. அதற்கு அவர்கள்: “கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று சொல்லி, கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
இதுவரை இந்த அனுபவத்தை உடையவர்களாக நீங்கள் காணப்படாவிடில், இன்றே வாஞ்சியுங்கள். அப்படி இரட்சிக்கப்படும்போது நடப்பது என்ன?
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். வெளிப்படுத்தல்-7:17
கண்ணீர்களைத் துடைப்பார் என்றால் தேவைகளைச் சந்திப்பார் அப்பொழுது உங்கள் வாழ்வில் பூரண மகிழ்ச்சி உண்டாகும். ஆமென். அல்லேலூயா
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments