கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார் ஆதியாகமம்-18:14
தேவன் ஆபிரகாமை அழைத்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்று வாக்குரைத்தது மட்டுமன்றி, அவனை அழைத்து வானத்தைப் பார்! நட்சத்திரங்களை உன்னால் என்ன முடியுமோ? கடற்கரை மணலைப் பார்! உன்னால் எண்ணக் கூடுமோ? அவ்விதமாக நான் உன்னை ஆசீர்வதிக்கப் போகிறேன் என்றார்.
வானத்தைப் பார்த்தான், பூமியைப் பார்த்தான். அவைகளில் என்ன மாற்றம் இல்லையோ, அதுபோல சாராளிடத்திலும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு நாள் தேவதூதர்கள் ஆபிரகாம் வீட்டிற்கு வந்து உற்பவக் காலத்திலே உன் மனைவி ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாள் என்று சொன்னவுடன், சாராளுக்கு அடக்கிக் கொள்ள முடியாத அளவு சிரிப்பும், நகைப்பும். காரணம் நான் கிழவி, என் ஆண்டவன் முதிர் வயதுள்ளவன். ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நின்று போனபின் எப்படி இன்பம் உண்டாகும்? என்று சரீர பெலவீனத்தை எண்ணினாள்.
இன்று அநேகர் இப்படித்தான் சூழ்நிலைகளை வைத்துத் தங்களை தேற்றிக் கொள்கிறார்கள். அதன் மூலம் தேவ வல்லமையை அற்பமாக எண்ணுகிறார்கள். பிரியமானவர்களே! திருமணம் முடித்த ஒரு இளம் தம்பதியினர் ஏழு வருடங்கள் குழந்தை இல்லாதிருந்தார்கள் . அவர்களுக்காக ஜெபித்த போது ஆண்டவர் வாக்குப் பண்ணினார். அது போல குழந்தையைக் கொடுத்தார். அதே தேவன் இன்று, இப்பொழுது உங்களுக்கு அற்புதம் செய்வார். விசுவாசிப்போம். ஆமென்.
தேவனுடைய சித்தத்திற்கு நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதில் தான் உண்மையான மனநிறைவைக் காணலாம்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments