என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன் யோபு-19:25
வியாதிகள் பயங்கரமான சூழ்நிலைகள் வரும்போது கலங்கிப் போய்விடுகிறோம். உதாரணமாகச் சொல்வேனேயாகில் இயேசுவோடு ஊழியம் செய்த ஸ்திரீகள், அவர் மரித்துக் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த போது, மூன்றாம் நாள் காலையிலே இருட்டோடே எழுந்து, கல்லறையினிடத்தில் போகும் போதே “யார் நமக்காக இந்தக் கல்லைப் புரட்டுவார்கள்?” என்று ஒருவரோடே ஒருவர் பேசிக்கொண்டார்களாம். இவர்கள் யார்? இயேசுவோடு இருந்தவர்கள்!
ஃபில்லிஸ் தாம்ப்ஸன்(Phyllis Thompson) எழுதிய சாது சுந்தர்சிங் என்ற நூலிலிருந்து ஒரு தொகுப்பை எடுத்து உங்களோடு பகிர்ந்து கொள்ள வாஞ்சிக்கிறேன். இந்தச் சாட்சி சாதுவோடு இருந்த சாரோன் பகிர்ந்து கொண்ட ஒன்றாகும். ஒரு நாள் இரவு ஜன்னல் பக்கமாக நின்று இரவின் நிலவொளியிலே சாதுவைத் தேடினபோது, ஒரு மரத்தடியில் தியானம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அதோடு அவர் கண்ட மற்றுமொரு காட்சி அவரைத்திடுக்கிட வைத்தது. சாதுவை நோக்கி ஒரு புலி வருவதைக் கண்டார். கூச்சல் போடமுடியாமல் திகைத்தவராக நின்று நோக்கினார். புலி சாதுவை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே சாது அந்தப் புலிக்கு நேராக தன் கையை நீட்டினார். புலி அப்படியே மடங்கி அமர்ந்தது. என்ன ஆச்சரியம்! சாது பயப்படவில்லை. காரணம் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அவர் அறிந்திருந்தார்.
அப்படியானால் நீங்கள் இனி பயப்படாதிருங்கள். அவர் எந்தச் சூழ்நிலையிலும் உங்களைக் கைவிடமாட்டார். ஆமென். அல்லேலூயா
நம் வருத்தத்தின் மத்தியில் இயேசு நமக்கு நம்பிக்கையாயிருக்கிறார்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments