ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். பிலிப்பியர்-2:3
தேவ பிள்ளைகள் ஒருவரை ஒருவர் தங்களிலும் மேன்மையாக எண்ண வேண்டும் என்று வேதம் கற்பிக்கும் விதத்தைக் கவனியுங்கள். இன்று படிப்பு, பணம், செல்வாக்கு, அழகு என்று ஏதோ ஒருவகையில் தங்களைவிட மற்றவர்களைக் குறைவாகவே எண்ணுவதுண்டு. சிலர் சாதிகளை வைத்து, தொழிலை வைத்து, மற்றவர்களைக் குறைவாகவே எண்ணுவதுண்டு
கேட்ட ஒரு கதை என் ஞாபகத்திற்கு வருகிறது. ஒருநாள் ஒரு கிளி ஒரு காகத்தைப் பார்த்து, “நீ மிகவும் கருப்பாய் இருக்கிறாய். என்னைப்பார். மனிதர்களால் விரும்பப்படும் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்” என்று உதாசினப்படுத்தியது. காகம் மனம் நொந்துபோனது. காகம் கிளியைப்பார்த்து “ஏதோ தெரியவில்லை! ஆண்டவன் என்ன இப்படிப் படைச்சிட்டான்” என்று கவலையோடு கூறியது.
சில நாள் கழித்து, ஒருவர் “கா… கா…” என்றழைத்து ஆகாரம் வைத்தார். நமக்குத் தெரியும் காகம் எப்பொழுதும் கண்களை ஒற்றைக்கண்ணாக்கிக் கொண்டுதான் செயல்படும். ஆகாரத்தை உண்ணும் போது, மேலே ஒரு கூட்டில் கிளி இருப்பதைக் கண்டு சுகம் விசாரித்தார் காகத்தார். கிளி தன் கதையைக் கூறியது. “பார்! இந்த மனுஷங்க எனக்குப் பேச்சுவரணும்னு சொல்லி, என் வாயில் சூடு போட்டிருக்காங்க” என்றது. உடனே காகம் கிளியைப்பார்த்து, “கிளியே! கிளியே! பார் இதுதான் உலகம். இதுதான் தேவனுடைய படைப்பின் செயல். ஒருவனை உயர்த்துவதும், ஒருவனைத் தாழ்த்துவதும் அவருக்கு லேசான காரியம். உனக்குப் பேச்சுவர வாயில் சூடுபோட்டவன், என்ன பேர் சொல்லி காகான்னு கூப்பிட்டு சோறு போடுறான் பாத்தியா?” என்றது.
எனவே நண்பர்களே! யாரையும் தாழ்வான எண்ணத்தோடு பாராதிருங்கள். யாருக்குத் தெரியும் எது எப்பொழுது நடக்கும் என்று? எனவே தேவனுக்கு முன் தாழ்மை பட்டு மற்றவர்களை மேன்மையாக எண்ணுங்கள். ஆமென்.
தேவனை மகிமைப்படுத்தவே நாம் படைக்கப்பட்டோம்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments