என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. சங்கீதம்-94:18
பாட்டுக்காரன் பாடுகிறான்
தாங்கி நடத்தும் கிருபை இது
தாழ்வில் நினைத்த கிருபை இது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் தாங்கும் கிருபை இது
எனது தகப்பனார் கர்த்தராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டபோது, அவருடைய தாயும் தகப்பனும் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஆண்டவராகிய இயேசு அவரைக் கைவிடவில்லை. மாறாகத் தம்முடைய ஆணிகள் கடாவப்பட்டட கரத்தை நீட்டி அவரைத் தாங்கி அணைத்துக் கொண்டார். அதுமட்டுமல்ல தன்னைத் தாங்கிய தேவனை நோக்கி ஆண்டவரே என் தகப்பனையும் தாயையும் நீர் உம்முடைய வலது கரம் கொண்டு தாங்க மாட்டீரா? என்று கேட்டார்.
அவர் விருப்பத்தின்படியே அவர்களையும் இரட்சித்தது மட்டுமல்ல, எத்தனையோ ஆபத்துகளில் தேவைகளின் மத்தியில் யார் மூலமாகச் சந்திக்கப்படும் என்று நினைத்த போது, அந்தக் கவலை கண்ணீர் வேளையில் ஆண்டவருடைய அன்பின் கரம் தாங்கி அவர்களுக்கு அற்புதம் செய்தது. அந்தத் தாங்குகிற கிருபை உங்களையும் தாங்கும் உங்கள் பிள்ளைகளைக் குறித்த கவலை உங்களை வேதனைக்குள்ளாக்குகிறதா? கவலை வேண்டாம்! தாங்கும் கிருபை உண்டு. அந்தக் கிருபையானது உங்கள் கால்கள், உங்களது பிள்ளைகள் கால்கள் சறுக்கும் போது தாங்கும். அந்தக் கிருபையை வாஞ்சியுங்கள்.
தந்தை பெர்க்மன்ஸ் பாடியது போல நாமும் சேர்ந்து பாடுவோம்
எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும் போது
உம் கரங்கள் அணைக்குதையா
விசுவாசிப்போம்! அற்புதம் நிச்சயம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா
நியாயப்பிரமாணத்தின் தேவைகளை பரிபூரணமாக இயேசு நிறைவேற்றினதினால், அவருடைய கிருபையின் சமாதானத்தை பரிபூரணமாக அனுபவித்து மகிழ்வோமாக!
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments