கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். I-சாமுவேல்-17:47
அநேக நேரங்களில் சத்துரு நமக்கு விரோதமாகச் செயல்பட ஆரம்பிக்கும் போது, சத்துரு எப்படி இருப்பான் என்று கேட்கிறீர்களா? அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். அவர்கள் மூலமாகவே தன்னுடைய கிரியைகளை அவன் செய்வான். குறிப்பாக, வேலை செய்கிற இடங்களில், பாடசாலை மாணவர்களிடையில் தனது கிரியைகளைச் செய்கிறான். அதின் நிமித்தமாக நாம் மனம் சோர்ந்து போகிறோம்.
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது ஒரே ஜெயகெம்பீரம். அது அவர்களுக்கு நீடிக்காத ஒன்று. காரணம் முன்னால் செங்கடல்; திரும்பி பார்த்தால் பார்வோனும் அவன் சேனையும். பட்டயத்தோடும் வில்லுகளோடும் ஜனங்கள் சோர்ந்து போனார்கள். அந்த வேளையில் மோசே ஜனங்களைப் பார்த்து, “பயப்படாதிருங்கள்! கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்” என்றான். நடந்தது என்ன? கர்த்தர் யுத்தம் செய்து வெற்றியீட்டினார்.
ஆம் பிரியமானவர்களே! இன்று உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் விரோதமாக வருகிற சத்துருவை தேவன் முறியடிப்பார். நீங்கள் மோசே சொன்னது போலச் சும்மாயிருந்து, மீரியாம் போலக் கர்த்தர் வெற்றிச் சிறந்தார்; பார்வோனையும் அவன் சேனையையும் கடலிலே மூழ்கடித்தார் என்று முழக்கமிடுங்கள். காரணம் நமக்கு ஒரு பெரிய வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான். எனவே விசுவாசித்து ஜெயம் எடுப்போம். ஆமென்
தேவனே, எனக்கெதிராக இருக்கும் இராட்சதப் பிரச்சனையைக் காட்டிலும் நீர் பெரியவராய் இருக்கிறபடியால், உமக்கு நன்றி கூறுகின்றேன்.
உங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
பெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்
0 Comments